Wednesday, November 3, 2010
அலைவும் உலைவும் புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகள்
நூல் அறிமுகம்
('ஊடறு' வில் வெளியான அறிமுகம்)
உண்மையில் புலம்பெயர் படைப்பிலக்கியம் பற்றி இதுவரை சரியான முழுமையான விமர்சனங்களை அல்லது பார்வையை யாரும் சரியாக முன் வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் அலைவும் உலைவும் தொகுப்பில் ஓரளவுக்கேனும் பல தகவல்களை திரட்டி குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் பற்றி பதிவு செய்து இருப்பது வரவேற்கதக்கதும் அது ஒரு வரலாற்று ஆவணமுமாகும்
புலம்பெயர் இலக்கிய உலகில் நாள்தோறும் எங்காவது ஒரு மூலையில் கலை இலக்கியச் செயற்பாடுகள் நிகழ்ந்தேறிய வண்ணமே உள்ளன. ஆனால் அவை பற்றிய முழுமையான தகவல்கள் எமது இலக்கியச் சூழலில் பரிமாறப்படுவது மிகக் குறைவு அதே நேரம் புலம்பெயர்வு என்பது ஒரே அரசியல் பூகோள எல்லையை விட்டு இடம்பெயர்ந்து சமூக அரசியல் பண்பாட்டுச் சூழ்நிலைகளால் பெரிதும் வேறுபட்ட பிரதேசத்தில் வாழ நேரிடுவர்களைக் குறிக்கின்றது. இவ்வாறு அரசியல் பண்பாட்டு அம்சங்களில் பெரிதும் வேறுபட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் படைக்கப்படும் இலக்கியங்களை புலம்பெயர் இலக்கியம் அல்லது புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறும் குணேஸ்வரன் புலம்பெயர் நாடுகளில் இருந்து வெளிவந்த பல சஞ்சிகைகள் தொகுப்புக்கள் பத்திரிகைகள் போன்றவற்றின் ஊடாக புலம்பெயர் படைப்பிலக்கியம் குறித்த பார்வைகளை முன்வைக்கின்றார்.
உண்மையில் புலம்பெயர் படைப்பிலக்கியம் பற்றி இதுவரை சரியான முழுமையான விமர்சனங்களை அல்லது பார்வையை யாரும் சரியாக முன் வைக்கப்படவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் அலைவும் உலைவும் தொகுப்பில் ஓரளவுக்கேனும் பல தகவல்களை திரட்டி குணேஸ்வரன் புலம்பெயர் இலக்கியம் பற்றி பதிவு செய்து இருப்பது வரவேற்கதக்கதும் அது ஒரு வரலாற்று ஆவணமுமாகும். என்றாலும் புலம்பெயர் நாடுகளில் பல பெண்களின் தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. அவையும் அலைவும் உலைவும் என்ற தொகுப்பில் இடம் பெற்றிருந்தால் இன்னும் பல தகவல்களை பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருந்திருக்கும். உதாரணமாக மைத்ரேயி,நளாயினி, பானுபாரதி; மாதுமை, சந்திரவதனா, நவஜோதி வேதாலங்காதிலகம் கோசல்யா, தமிழ்நதி ஜெயந்தி சாம்சன் போன்ற பல எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் சிறுகதைகளாகவும் கவிதைத்தொகுப்புக்களாகவும் வெளிவந்துள்ளன. இவர்களைப் போன்ற பல எழுத்தாளர்களை அல்லது அவர்களின் தொகுப்புக்களை தவிர்த்து நாம் புலம்பெயர் எழுத்துக்கள் பற்றி எழுத முடியாது. அதே போல இன்னும் தமது படைப்புக்களை தொகுப்பாக கொண்டு வரமால் உள்ள பல எழுத்தாளர்கள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் தமது படைப்புக்களை புலம்பெயர் சஞ்சிகைகள், இணையங்கள், மற்றும் பத்திரிகைகள் மூலம் வெளிக்கொணர்ந்துள்ளார்கள். அவர்கள் பற்றியும் இந்த அலைவும் உலைவும் என்ற புலம்பெயர்ந்த படைப்பிலக்கியம் குறித்த பார்வையில் வெளிவந்திருந்தால் அலைவும் உலைவும் ஒரு கனதியான விமர்சனமான நூலாக இருந்திருக்கும் என்பது எமது கருத்து. ஆனாலும் பலத்த முயற்சியின் மத்தியில் பல புலம்பெயர்ந்த சஞ்சிகைகள் மற்றும் தொகுப்புக்கள் பத்திரிகைகள் பற்றி இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளதினால் புலம்பெயர்ந்த இலக்கியம் பற்றி அறிந்து கொள்வதற்கு ஒரு சிறந்த நூலாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
நன்றி : ஊடறு, Monday, November 1, 2010 @ 9:47 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment